திங்கள், 4 ஏப்ரல், 2011

புனித பத்திரிசியார் கல்லூரி


புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி: பொன்ஜீன் வென்றது!

யாழ் பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு(23.02.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் செலுத்தப்பட்டு பாடசாலை, இல்லக் கொடியேற்றலைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கல்லூரி முதல்வர் எம்.ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக தடயவியல் மனோதத்துவ நிபுணர் குமார் பாலச்சந்திரவும், அவரது பாரியார் லொறீற்றா பாலச்சந்திரவும், கௌரவ விருந்தினராக வடமகாண உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ். இராஜேந்திராவும் கலந்துகொண்டனர்.
ஓட்டம், அஞ்சலோட்டம், பழைய மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான கயிறு இழுத்தல் போட்டி, பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆஞ்சலோட்டம், பழைய மாணவர்களுக்கிடையிலான அஞ்சலோட்டம் உட்பட பல விளையாட்டுகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.
பொன்ஜீன் இல்லம் , லோங் இல்லம், டண் இல்லம், மத்தியூஸ்இல்லம் ஆகியன முறையே முதலாம் , இரண்டாம் , மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக