திங்கள், 4 ஏப்ரல், 2011

உடுவில் மகளிர் கல்லூரி


உடுவில் மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

‘கல்லூரி மைதானத்திலிருந்து சிகரம் குழுவினர்- உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று வெள்ளிக்கிழமை(28-01-2011) பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் பாடசாலை முன்றலிலிருந்து அதிபர் ஷிரானி மில்ஸ் தலைமையில் மைதானத்துக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கடந்த வாரம் உயிரிழந்த உடுவில் மகளிர் கல்லூரியின் க.பொ.த. சாதாரணதர மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், கல்லூரிக் கொடி, இல்லக் கொடிகள் ஏற்பட்டு கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் ஷிரானி மில்ஸ் கல்லூரிக் கொடியை ஏற்றி வைக்க, இல்லங்களின் தலைமைப் பொறுப்பாசிரியர்கள் இல்லக் கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து, இல்லங்களின் மாணவர் அணிவகுப்பு மற்றும் கல்லூரி பாண்ட் அணிவகுப்பும் நடைபெற்றது.
கல்லூரி உப அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினர் உரையாற்றினார்.
தென்னாசியாவின் முதலாவது பெண்கள் விடுதி பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு, யாழ்ப்பாணத்தின் முதலாவது பெண் அரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைவதாக பாடசாலை உப அதிபர் சுனிதா கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், உடுவில் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொள்வதைவிட்டு மகிழ்ச்சி வெளியிட்டதுடன், கல்லூரி மாணவர்கள், மாணவர்களாக மட்டுமன்றி, எதிர்கால சமூகத்துக்கான சேவையை வழங்குபவர்களாக உயரவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார்.
தொடர்ந்து இறுதிநாள் மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக