திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ்தொல்புரம் விக்னேஸ்வர


யாழ் தொல்புரம் விக்னேஸ்வர வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி

– கோபி, பானுஷன் - யாழ் தொல்புரம் விக்னேஸ்வர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (9.2.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் இ.கணேசானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் சு.கணேசலிங்கமும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி ச.நில்மினியும் கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் சு.கணேசலிங்கம் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் சிவப்பு இல்லம் மற்றும் பச்சை இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்க கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், பாடசாலை முதல்வர் இ.கணேசானந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக