திங்கள், 4 ஏப்ரல், 2011

மட்டுவில் தெற்கு அமெரிக்க மிஷன்


மட்டுவில் தெற்கு அமெரிக்க மிஷன் வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

- நிருஷா ,தேசிகா – யாழ் மட்டுவில் தெற்கு அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி சனிக்கிழமை 1 மணிக்கு (26.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வித்தியாலய முதல்வர் வி.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி உடற்கல்விப் பணிப்பாளர் ரி.சிவகுமாரும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சிவஞானம் இல்லம், ராதா இல்லம் மற்றும் கேசவன் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக