திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ்ப்பாணக் கல்லூரி


யாழ்ப்பாணக் கல்லூரி மெய்வல்லுனர் போட்டி

-மைதானத்திலிருந்து கோபி, சாந்தரூபன்-வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று வியாழக்கிழமை (3.2.2011) பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் நோயல் விமலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எ. இராஜேந்திரன் மற்றும் நெல்லியடி மகாவித்தியாலய ஆசிரியர் திருமதி இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து இறைவணக்கம் மற்றும் இல்லத் தலைவர்களின் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் எ.இராஜேந்திரன் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான தாம்பிழுவைப் போட்டி, மாணவர் சைக்கிள் ஓட்டப் போட்டி ஆகியன நடைபெற்றன.
பரிசளிப்பு விழா ஆரம்ப வைபவத்தின்போது கல்லூரியின் மறைந்த சிரேஸ்ட ஆசிரியர் திருமதி த. நிர்மலாதேவி நினைவாக ஒருvநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புறவன் இல்லம், ஏப்ரகாம் இல்லம், கீச்கொக் இல்லம் மற்றும் கேஸ்ரிங் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் நோயல் விமலேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக