திங்கள், 4 ஏப்ரல், 2011

தெல்லிப்பளை யூனியன் !


தெல்லிப்பளை யூனியன் மெய்வல்லுனர் போட்டி:சிமித் வென்றது!

-பாலகுமார், சாந்தரூபன்- யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை(16-02-2011) பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் புண்ணியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் வைரமுத்து சிறிஸ்கந்தராஜாவும், சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் முதல்வர் கமலநாதனும் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதையடுத்து, மங்களவிளக்கேற்றல், இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடியேற்றல், இல்லக் கொடியேற்றலைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதன்மை விருந்தினர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சிமித் இல்லம், துரைரட்ணம் இல்லம், குணரட்ணம் இல்லம் மற்றும் ரிக்கன் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழிப்புலனற்ற மாணவர்களுக்கான விசேட விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக