திங்கள், 4 ஏப்ரல், 2011

அல்வாய் ஸ்ரீலங்கா


அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை மெய்வல்லுனர் போட்டி: பெரியதம்பி வென்றது!

-சுரேஸ் – யாழ் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (12.2.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் செ.செல்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை கோட்டக் கல்வி அதிகாரி பா.இராகுநாதனும், கௌரவ விருந்தினர்களாக சமூக சேவையாளர் பு.வேலாயுதம், தொழிலதிபர் க.தவயோகநாதனும், கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தடை தாண்டல், வளையத்துக்குள்ளால் புகுந்து செல்லல், அஞ்சலோட்டம் பந்துப் பரிமாற்றம் உட்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக ஆரம்பக் கல்வி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியதம்பி இல்லம், கந்தப்பு இல்லம் மற்றும் தம்பையா இல்லங்கங் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான இசைக் கருவிகள் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக