திங்கள், 4 ஏப்ரல், 2011

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி


கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் மெய்வல்லுனர் போட்டி

-நா.சாந்தரூபன்- யாழ் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி புதன்கிழமை (16.3.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் ஆர். இராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் எம்.பிரதீபனும், கௌரவ விருந்தினராக நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பிரதிப் பதிவாளர் யே.பிரபாகரனும் கலந்துகொண்டனர்.
பாண்வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து பிரதம விருந்தினர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைக்க மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டம், அஞ்சலோட்டம், குண்டெறிதல், பந்து கடத்தல் உட்பட்ட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.
சண்முகநாதன் இல்லம், செல்லையா இல்லம் மற்றும் நவரட்ணராஜா இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக இடைவேளை நிகழ்வில் உடற்பயிற்சி செய்த 24 பேருக்கும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலா 1000 ரூபா வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக