திங்கள், 4 ஏப்ரல், 2011

கைதடி நஃபீல்ட்:விழிப்புலனற்றவர்கள


கைதடி நஃபீல்ட்:விழிப்புலனற்றவர்களின் 55வது மெய்வல்லுனர் போட்டி

யாழ் கைதடி நபீல்ட் பாடசாலையின் 55வது இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி புதன்கிழமை காலை 9 மணிக்கு (2.3.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் ச.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
மாணவர்களின் அணிநடையினைத் தொடர்ந்து இல்லக்கொடி மற்றம் ஒலிம்பிக் தீபம் என்பன ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் பிறேமகாந்தனால் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இடைவேளை நிகழ்வாக விநோதவுடை மற்றும் கராத்தே நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
பச்சை இல்லம், சிவப்பு இல்லம் மற்றும் மஞ்சல் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இங்கு உரையாற்றிய தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் பிறேமகாந்தன், “கண்ணிருந்தும் குருடர்களாக நம்மில் பலர் வாழ்கின்றனர். ஆனால் இந்த மாணவர்களின் விளையாட்டுக்களை பார்க்கும் அனைவரின் கண்ணிலிருந்தும் நீரை வர வைத்துள்ளன.” என்று கூறினார்.
இல்ல விளையாட்டுப் போட்டிகளில் முதன்முதலாக இங்குதான் கராத்தே விளையாட்டு நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக