திங்கள், 4 ஏப்ரல், 2011

திருக்குடும்ப கன்னியர் மடம்


திருக்குடும்ப கன்னியர் மடம் மெய்வல்லுனர் போட்டி: கிலேயா வென்றது

-ஜி.கே.- யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம் மெய்வல்லுனர் போட்டி திங்கட்கிழமை (28.02.2011) ¬யாழ் பத்திரிசியார் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து அணிநடை நிகழ்வு, ஒலிம்பிக் தீபம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் திரு. வீ. அருளானந்தம் கலந்துகொண்டார். கொளரவ விருந்தினராக ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை கே.ஜேம்ஸ் சிங்கராஜர் கலந்து சிறப்பித்தார்.
100 மீற்றர் ஓட்டம், 200மீற்றர் ஓட்டம், அஞ்சலோட்டம், தடை தாண்டல் நிகழ்வு, பாடசாலை மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான கயிறிழுத்தல் நிகழ்வு, பழைய மாணவிகளுக்கான நிகழ்வு , பாடசாலை ஆசிரியர்களுக்கான நிகழ்வு என நிகழ்வுகள் இடம்பெற்றன.
இடைவேளை நிகழ்வாக மாணவிகளின் இசையுடன் கூடிய ஆட்டம் இடம்பெற்றது.
கிலேயா இல்லம், மாட்டினா, ஜோசப்பின், விசிற்ரேசன், திரேசா இல்லங்கள் முறையே முதலாம் இரண்டாம், மூன்றாம் , நான்காம் இடங்களைப்பெற்றன இடங்களைப் பெற்றன.
இறுதியில் விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கு கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக