திங்கள், 4 ஏப்ரல், 2011

பளை மத்திய கல்லூரி


பளை மத்திய கல்லூரி மெய்வல்லுனர் போட்டி : வள்ளுவர் வென்றது!

- அசோபனா - கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (18.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் க. குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜாவும், சிறப்பு விருந்தினராக யாழ் பலாலி இராணுவக் கட்டளைத் தளபதியும் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டததை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டம், அஞ்சல் ஓட்டம், பந்துப் பரிமாற்றம் மற்றும் குண்டெறிதல் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக இசையுடன் கூடிய உடற் பயிற்சி நடைபெற்றது.
இதனையடுத்து பழைய மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
வள்ளுவர் இல்லம், இளங்கோ இல்லம் மற்றும் கம்பர் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக