திங்கள், 4 ஏப்ரல், 2011

கோண்டாவில் இராமகிருஷ்ண


கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

- நிரோசனா, அருட்செல்வி, ரேகா - யாழ் கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் 2007ம் மற்றும் 2008ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு (19.2.2011) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், நல்லூர் பிரதேச அமைப்பாளர் இரவீந்திரதாசனும், கௌரவ விருந்தினர்களாக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் அ.வேதநாயகம், நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராஜா,ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வரவேற்புரையை மகாவித்தியாலயத்தின் பிரதி முதல்வர் திருமதி ரேவதி பாலசுப்பிரமணியம் நிகழ்த்த, தலைமையுரை மற்றும் முதல்வர் அறிக்கை ஆகியவற்றை வித்தியாலயத்தின் முதல்வர் ச.வாமதேவன் நிகழ்த்தினார்.
இங்கு உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வித்தியாலயத்தின் அதிபரினால் பாடசாலையின் நலன் கருதி முன்வைக்கப்பட்ட இருமாடிக் கட்டடம், தளபாட வசதிகள், விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் உட்பட்ட 10 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை இந்த வருட இறுதிக்குள் செய்து தர முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
நிகழ்வின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக