திங்கள், 4 ஏப்ரல், 2011

வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா


லன்புரி நிலையத்துக்குள் நடைபெற்ற வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

யாழ் கொடிகாமம் இராமாவில் நலன்புரி நிலையத்தில் இயங்கி வரும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வெள்ளிக்கிழமை (18.2.2011) நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் செவ்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்துகொண்டார்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு  ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், ஓட்டம், உருவம் பொருத்துதல், பந்து கடத்துதல், உட்பட பல விளையாட்டுகள் நடைபெற்றன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வராசா, மருதங்கேணி உதவிக் கல்விப் பணிப்பாளர் பொன்னையா, ஜே.ஆர்.எஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை எட்வின், தென்மராட்சி பிரதேச செயலாளர் சாந்தசீலன், வடமராட்சி பிரதேச செயலர் திருலிங்கநாதன், 523 படையணியின் தளபதி பிரிகேடியர் தெமட்டபிட்டிய, ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பி.யின். தென்மராட்சி அமைப்பாளர் வலன்டைன், வலிகாமம் பிரதேச இணைப்பாளர் ஜீவன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக