திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ் பரியோவான்


யாழ் பரியோவான் மெய்வல்லுனர் போட்டி

யாழ் பரியோவான் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி சனிக்கிழமை(5.2.2011) காலை 8.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ்.ஜே.ஞானப்பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் சி.அண்ணாத்துரை கலந்துகொண்டார்.
விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் சி. அண்ணாத்துரை விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக பழைய மாணவர் நிகழ்வுகள் மற்றும் சாரணர் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக