திங்கள், 4 ஏப்ரல், 2011

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி


சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மெய்வல்லுனர் போட்டி:குட்சைல்ட் வென்றது!

யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு (17.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் திருமதி ரி.துசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற் கல்விப் பணிப்பாளர் கே.ஞானசாந்தன் கலந்துகொண்டார்.
மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஓட்டம், உயரம் பாய்தல், குண்டெறிதல், அஞ்சல் ஓட்டம் மற்றும் தடைதாண்டல் உட்பட பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள், ஊழியர்களுக்கான விiளாயாட்டுகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவத் தலைவிகளுக்கிடையிலான விiளாட்டுப் போட்டிகள் என்பன நடைபெற்றன.
குட்சைல்ட் இல்லம், ஒபிண்காட்ட இல்லம், பேஜ் இல்லம் மற்றும் காட்டர் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக