திங்கள், 4 ஏப்ரல், 2011

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி


வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மெய்வல்லுனர் போட்டி

-கோபி- வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி புதன்கிழமை (2.2.2011) பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் சபாரத்தினசிங்கம் தலமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி ம. சரவணபவ ஐயரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற் கல்வித்துறை விரிவுரையாளர் nஐயானந்தக்குமாரியும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக மக்கள் வங்கியின் சங்கானைக் கிளை முகாமையாளர் ச. சர்வானந்தனும கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒளிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தி சரவணபவ ஐயர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக சிறுவர்களின் உடற்பயிற்சியும் பின்னர் விநோத உடைப் போட்டிகள், பழைய மாணவர் நிகழ்வுகள் மற்றும் சாரணர் நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணிக்கர் இல்லம், சுந்தரர் இல்லம், அப்பர் இல்லம் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சம்பியன் கேடயங்கள் என்பன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர், மாணவர்கள் பெற்றோர், பழையமாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக