திங்கள், 4 ஏப்ரல், 2011

மானிப்பாய் இந்து


மானிப்பாய் இந்து மெய்வல்லுனர் போட்டி:வென்றது வாகீசர்

யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை (2.2.2011) பிற்பகல் 1.45 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சிவநேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வைத்தியக் கலாநிதி எ.சிறிதரனும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். நடராஜாவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் என். விவேகானந்தராஜாவும் கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக் கொடி மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றப்பட்டதையடுத்து, இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் எற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் எ.சிறிதரன் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத்  தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக சிறுவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு, வினோதவுடைப் போட்டி, பழைய மாணவர்கள் நிகழ்வு மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி என்பன நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வாகீசர் இல்லம், சுந்தரர் இல்லம், சம்பந்தர் இல்லம் மற்றும் மாணிக்கர் இல்லங்கள் முறையே முதலாம், இராண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் சிவநேஸ்வரன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழை மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாலகுமார், சாந்தரூபன், கிரிசாந், பானுசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக