திங்கள், 4 ஏப்ரல், 2011

கிளிநொச்சி மகாவித்தியாலய


கிளிநொச்சி மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வியாழக்கிழமை (24.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் கலந்துகொண்டார்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டததை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டம், அஞ்சலோட்டம் மற்றும் குண்டெறிதல் உட்டப பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மகாவித்தியாலயம் யுத்த காலத்திலும் தற்போதும் அனைத்து செயற்பாடுகளிலும் திறமையாகச் செயற்படுவதாக கூறினார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு தமிழ் இன்னிய அணிவகுப்பு ஆரம்பிப்பதற்கு 1,00000 ரூபாவினை ஒதுக்கித் தருவதாகவும், வித்தியாலய விளையாட்டு மைதானத்துக்கு புற தரை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
கல்விச் செயற்பாட்டில் கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் தரமான கல்வியினை வழங்க வேண்டும் என்றும், அதனை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக